மக்களை சீரழிக்கும் மருத்துவமனைகள்
கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெருக ஆரம்பித்தவுடன் ‘குடும்ப டாக்டர்’ என்ற சொற்றொடரே அழிந்து விட்டது. மருத்துவ உலகின் அட்டூழியங்களில் பாதிக்கப்படுவது நோயாளிகள் மட்டுமல்ல, திறமையான மருத்துவர்களும் தான். பெரும் நிறுவனங்கள் கால் பதித்தால் பெட்டிக் கடைக்காரர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கொடி பிடித்த யாருமே கார்ப்பரேட் மருத்துவமனைகள் வர ஆரம்பித்தவுடன் சின்னச் சின்ன மருத்துவமனைகளோ, அல்லது தனி மருத்துவர்கள் க்ளீனிக்குகளோ பாதிக்கப்படுவது குறித்து கவலைப்படவே இல்லை. கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஒவ்வொரு மருத்துவருக்கும் டார்கெட் வைக்கின்றன. இந்த மாசம் இத்தனை எக்கோ, இத்தனை ஈசிஜி, இத்தனை லொட்டு டெஸ்ட், இத்தனை லொடக்கு டெஸ்ட் என்றெல்லாம் நிபந்தனைகள். இதனால் பாதிப்புக்குள்ளாவது நோயாளிகள் மட்டுமல்ல.. மருத்துவர்களும் தான். திட்டு, சாபம் எல்லாம் பெரும்பாலும் மருத்துவர்களுக்குத் தான் போய்ச் சேருகிறது. கார்ப்பரேட் ஓனர்கள் தப்பித்து விடுகிறார்கள். முன்பெல்லாம் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தரும் 40 இன்ச் டிவி, பட்டாயா ட்ரிப் ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு அவர்களின் மருந்துகளை மருத்துவர்கள் எழுதித் தருவார்கள...