'' வைக்கம் வீரர் '' உருவான '' கதை''
காலம் காலமாக கழகங்கள் கொடுக்கும் பில்ட் அப்பை மட்டுமே பார்க்கும் எவருக்கும் வைக்கம்போராட்டம் என்பது என்னமோ ஈ.வெ.ராவால் ஆரம்பிக்கப்பட்டு , நடத்தப்பட்டு , வெற்றிகரமாக ஆலய நுழைவு செய்யப்பட்டது என்றே நினைக்கத்தோன்றும்.....
வைக்கம் என்னும் ஊர் கேரளாவில் , அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கிராமம்....
1916 ல் திட்டமிடப்பட்டு 1924ல் துவங்கிய அந்த போராட்டத்தை துவங்கி , நடத்தியவர் டி.கே.மாதவன் என்பவர்....
அன்றைய காலகட்டத்தில் , தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழையமுடியாத நிலை நாடு முழுவதும் இருந்தது....
ஈ.வெ.ரா ஏன் தன் போராட்டத்தை தமிழகத்தில் நடத்தவில்லை? அவர் பிறந்த ஈரோட்டிலோ , சேலத்திலோ , கோவையிலோ ,எல்லா கோயிலகளிலும் தலித்கள் அனுமதிக்கப்பட்டனரா என்ன?
இங்கு இருக்கும் கோயில்களை விட்டுவிட்டு எங்கோ இருக்கும் வைக்கத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன?
வைக்கத்தில் இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது. . இந்நிலையில் ஸ்ரீ நாராயணகுருவின் சீடரும், காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவருமான டி. கே. மாதவன் இப்பிரச்சனைக்காகப் போராட முன் வந்தார். அவர் காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவர்களை ஒன்று திரட்டினார். இதற்காக 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் காலை 6 மணிக்குப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இவர்களது திட்டம் அரசுக்குத் தெரிந்த போது காவல்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டது.
டி. கே. மாதவன் காவல்துறையின் தடையை மீறி ஊர்வலமாகச் சென்று இப்போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்தார். தடையை மீறி நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தில் சென்றவர்களில் குஞ்ஞப்பி என்கிற புலையர் சாதியைச் சேர்ந்தவர், பாகுலேயன் என்கிற ஈழவர் சாதியைச் சேர்ந்தவர், கோவிந்தப் பணிக்கர் என்கிற நாயர் சாதியைச் சேர்ந்தவர் என மூன்று நபர்கள் காவல்துறையினர் நின்று கொண்டிருந்த இடம் வரை சென்றனர். இந்த மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து 6 மாத காலம் சாதாரணத் தண்டனைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும்.
இந்தப் போராட்டத்திற்கு டி. கே. மாதவன், மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து வைக்கம் ஊரின் நிலையை எடுத்துக் கூறி ஒப்புதல் கடிதம் பெற்று ஆதரவு திரட்டினார். அதன் பிறகு டி. கே. மாதவன், கே. பி. கேசவமேனோன் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் முன் வந்து காவல்துறையினரின் தடுப்புச் சுவரை மீறிச் சென்றனர். இந்தக் குற்றத்திற்காக இருவரையும் காவல்துறை செய்ததுடன் 6 மாத காலம் கடுங்காவல் தண்டனையும், ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன.
இதன் பிறகுதான் ஈ.வெ.ரா இந்த போராட்ட்டத்தில் நுழைகிறார்....
வைக்கம் சென்று பிரச்சாரம் செய்கிறார்....கைது செய்யப்படுகிறார்....அவரோடு காங்கிரஸ்பிரமுகர் திரு.டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்....
ஈ.வெ.ரா மட்டுமல்ல., அன்றைய தமிழக காங்கிரஸ் பிரமுகர்களான ராஜாஜி , எஸ்.சீனிவாச அய்யங்கார் ஆகியோரும் சென்று போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்....
இந்தப் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் மகாத்மா காந்தி 1925 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று வைக்கம் சென்றார்.....காந்தியடிகள் திருவாங்கூர் இராணியுடன் வைக்கம்போராட்டம் பற்றி நடத்திய சமரசப் பேச்சில் பிட் என்ற ஆங்கிலேயே அதிகாரி, திவான் இராகவ அய்யங்கார் மற்றும் வைதீகர்கள் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையின் முடிவில் திருவாங்கூர் இராணியார் வைக்கம் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செல்வதற்கு உரிமை வழங்கச் சம்மதித்தார்.
சரி...ஈ.வெ . ரா அங்கு எதற்கு சென்றார்?
// ராமசாமி அங்கே எதுக்கு போனார் என சொல்லலியே. இப்போ சிறை நிரப்பும் போராட்டம் போல அதுவும் நடந்தது. அதாவது கைது பண்ண பண்ண அடுத்த ஆட்கள் போய் கைதாவாங்க. அதுக்கு ஆள் சேர்க்க எல்லா மாகாணங்களிலிருந்து ஆள் கூப்பிட்டாங்க அப்படி பத்தோடு பதினொன்னா போன ஆள் தான் ராமசாமி. போனவுடனே கைது பண்ணி உள்ளே வைச்சுட்டாங்க.
திருவிதாங்கூர் மகாராஜா சென்னை பயணிக்கும் போது ஈராட்டில் வண்டிய நிறுத்தி இந்த ராமசாமியின் விருந்தினர் மாளிகையில் தான் தங்குவாராம். அந்த கெத்துலே நன போனா கைது செய்யமாட்டாங்க என வீராப்பு பேசிட்டு தான் போனார். போனவுடனே காட்டுகாட்டுன்னு காட்டி உள்ளே தூக்கி போட்டுட்டாங்க.
பேச்சுவார்த்தை முடிஞ்சவுடனே விடுதலையாயி ஓடி வந்த ஆள் தான் அதுக்கப்புறம் மலையாளிகள் என்றாலே வெறுப்பு ஆகாது. அதுக்கப்புறம் தான் மலையாளிகளை திட்டி எழுதினதே. அதையே இன்னமும் இந்த த்ராபைகள் கடைபிடிக்குதுகள். // [ நன்றி : நண்பர் ராஜாசங்கர் ]
ஆக, வைக்கம் போராட்டத்தை ஈ.வெ.ரா தொடங்கவும் இல்லை..... வெற்றிகரமாக முடித்துவைக்கவும் இல்லை.....
தொடங்கியதும் , நடத்தியதும் , முடித்து வைத்ததும் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு....ஈ.வெ.ரா இடையில் , போராட்டத்தின் ஒரு பகுதியில் பங்கேற்றார் , சிறை சென்றார்...அவ்வளவே.....
இவர் மட்டும் எப்படி '' வைக்கம் வீரர் '' ஆனார்?
அதுதான் தீராவிட கழகங்களின் கெப்பல்ஸ் பிரச்சாரத்தின் வெற்றி....
யேல் பல்கலைக்கழகத்தை வேடிக்கை பார்க்கச்சென்ற அண்ணாத்துரையை , பட்டமேற்பு விழாவில் தலைமையேற்று உரை நிகழ்த்தினார் என்று புரளியைஉருவாக்கி தமிழன் தலையில் மிளகாய் அரைத்தனர் கழக காளைகள் ....
காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் தியாகிகள் பலவருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு [ காமராஜர் மட்டும் ஒன்பது வருடங்கள் சிறையில் இருந்தார் ] அமைதியாக இருக்க , பத்து நாள் சிறையில் இருந்த கருணாநிதி ''பாளையங்கோட்டை சிறையினிலே . பாம்புகள் பல்லிகள் நடுவினிலே '' என்று பாட்டுபோட்டு மக்களை ஏமாற்றினார்......
மிசா சட்டம் இந்தியா முழுக்க அமலானது..... வாஜ்பாய் , அத்வானி உள்ளிட்ட அன்றைய ஜனசங்க தலைவர்களும் , பல கம்யூனிஸ்டு தலைவர்களும் , லட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் , கம்யூனிஸ்ட் கட்சியினரும் கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தனர்....எவரும்தன் பெயருக்குப்பின்னால் மிசா என்றுபோட்டுக்கொள்ளவில்லை....
தமிழகத்தில் மட்டும் மிசா கணேசன் , மிசா குப்புசாமி , மிசா ராமசாமி என்று தம் பெயருடன் மிசாவை இணைத்துகொண்டனர் இந்த அல்பங்கள்.....பொய்யும் , புனை சுருட்டும் ,பித்தலாட்டமும் கழகங்களின் கை ஆயுதம்.....
ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொல்லி , அதை உண்மையாக்குவதில் வித்தகர்கள் இந்த திருடர்கள்.....
அப்படி அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த வைக்கம் வீரர் என்னும் மாயை.....
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் . இறுதியில் தர்மமே வெல்லும்.....

Comments
Post a Comment