மலேகன் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்குகிறார் ப.சிதம்பரம்

ஹிந்து பயங்கரவாதம், காவி தீவிரவாதம் SAFFRON TERROR HINDU EXTREMISM என்ற சொற்களை பயன்படுத்தினால் போதாது.  அதற்கு ஆதாரங்களும் நாம்தான் ஏற்பாடு செய்யவேண்டும் என்று தேசிய ஆலோசனை குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார்கள் போலும்.  அதற்கு வித்திடுவதுபோல இருக்கிறது இந்த செயல்.

இராணுவத்தில் இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு என்றபோது இராணுவத்தில் இருந்த முஸ்லிம்களே எதிர்த்தார்கள்.  ஆனால் ஹிந்துக்களின் பயங்கரவாதிகள் அதுவும் இராணுவத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் உருவாக்க முயன்றது உண்மையான பயங்கரவாதியான காங்கிரஸ் அரசு, அதுவும்சோனியாவின் தலைமையில்.

லெப்டினன்ட் கர்னல் புரோஹித் சிக்கினார்.  2008 மலேகான் குண்டு வெடிப்பில் இவர்தான் குற்றவாளி என்றும், சாத்வி பிரக்யா தாக்குருடன் இணைந்து இதை நிகழ்த்தினார் என்றும், இவர்தான் ரகசியமாக 60 கிலோ RDX வெடி மருந்தை திருடி இதை செய்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.  இப்போது டைம்ஸ் நவ் ஊடகத்துக்கு ஒரு ஆதாரம் சிக்கியுள்ளது.  அதன்படி, புரோஹித் அப்பாவி என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் கிடைத்துவிட்டன.

தேசிய புலனாய்வு துறை மலேகான் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட RDX பொருளை கைப்பற்றப்பட்ட இடத்தில் வைத்ததே தாஜ் பயங்கரவாத தாக்குதலில் இறந்த ஹேமந்த் கர்காரேதான் என்றும், சப் இன்ஸ்பெக்டர் சேகர் பக்டே என்பவர், தியோபலியில் உள்ள ஓய்வு பெற்ற இராணுவ வீரர் சுதாகர் சதுர்வேதி வீட்டை உடைத்து வீடெங்கும் RDX பொருளை தூவி விட்டார்.  இது ஒரு இராணுவ மேஜருக்கும், சுபிராருக்கும் தெரிந்தவுடன் தன்னை மாட்டிவிட வேண்டாம் என்று இவர்களிடம் கெஞ்சியுள்ளார்.  என்ன விவகாரம் தெரியவில்லை என்று இவர்கள் குழம்பிய நிலையில் இரண்டு நாட்கள் கழித்து சதுர்வேதி வீட்டில் அதிரடி சோதனை நடந்தது.

அங்கு போய் பஞ்சு மூலம் RDX தடயங்களை எடுத்து, கிடைத்தது ஆதாரம் என்று விளம்பரம் செய்துள்ளது ATS அமைப்பு.  மராட்டிய அமைப்பான ATS புரோஹித் காணவில்லை என்று சொல்லப்பட்ட 70கிலோ RDXஉம் கிடைத்த நிலையில் இவரிடம் 60 கிலோ இருந்தது என்று சொல்வதே தவறு என்று கூறியுள்ளது.  ஏற்கனவே பல சாட்சிகள் அன்றைய உள்துறை அமைச்சர்  ஷிண்டேதான் RSS பெயரை சேர்க்க சொன்னார் என்றும், இதெல்லாம் திட்டமிட்ட செயல்கள் என்றும், அதை சிதம்பரம் வெற்றிகரமாக தொடர்ந்தார் என்றும் அனைவரும் அறிவீர்.

இதெல்லாம் நடக்கவேண்டும் என்று முஸ்லிம்கள் கேட்கவே இல்லை.  ஆனால், வெறுமனே, அவர்கள் இதனால் உற்சாகம் அடைவார்கள்.  ஹிந்துக்களும் பயங்கரவாதம் செய்கிறார்கள் என்றும், அதை காங்கிரஸ்தான் கண்டுபிடித்தது என்றும் சந்தோஷப்படுவார்கள் என்றும் எண்ணி இப்படி செய்துள்ளனர்.

அடுத்து விசாரிக்கப்படவேண்டிய கட்டம், காணாமல் போன எல்லா வெடி மருந்தும் புரோஹித் வேலையில் இருக்கும்போதே கிடைத்தது என்றால் மாலேகானில் வெடித்தது என்ன?  அங்கு இறந்த அப்பாவி முஸ்லிம்களுக்கு நியாயம்?

இரண்டே பார்வைகள்தான் இதில்.

ஒன்று, ஹிந்துக்கள் எதையும் சட்டபூர்வமாக எதிர்கொள்கிறார்கள் என்பதற்காக பயங்கரவாத  முஸ்லிம்கள் தங்கள் ஆட்கள் மீது தாங்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும்.

இரண்டு, எப்படியாவது ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பெரும் கலவரத்தில் ஈடுபட வைத்து யுத்த பூமியாக மாற்றி தாங்கள் செய்த தவறுகளை இன்னும் பல ஆண்டுகளுக்கு மறைத்து, முஸ்லீம் வாக்குகளை இறுக்கி தங்களுக்கே வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற ஏற்பாடுதான் இது.

Comments

Popular posts from this blog

உத்தவ கீதை - சில கேள்விகளும் பதில்களும்

கர்ணன் கவச ரகசியம்

'' வைக்கம் வீரர் '' உருவான '' கதை''