தடுப்பூசி ஏன்?
குழந்தைகள் வைத்திருப்போர்களின் கவனத்திற்கு,
தடுப்பூசி போடுவது ஏன்?
தடுப்பூசி என்பது மருந்தல்ல என்ற எளிய உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். தடுப்பூசி என்று நமக்கு உட்செலுத்தப்படும் திரவம், எந்த வைரஸால் நமக்கு பாதிப்பு வரும் என்று பயப்படுகிறோமோ, அதே வைரஸ் தான். ஆனால், அதனை முற்றிலும் செயல் இழக்கச் செய்து நமக்கு உட்செலுத்தப்படும். பயப்படாதீங்க!
தடுப்பூசி/சொட்டு மருந்து எப்படி செயல்படுகிறது என்று என் அறிவுக்கு எட்டியவரை மிக எளிமையாகச் சொல்ல முனைகிறேன்.
நம் உடலுக்குள் வீரியத்துடன் உள்ளே நுழையும் வைரஸ்களை அடையாளம் கண்டு, அதன் சக்தியை உணர்ந்து, நம் வெள்ளையணுக்கள் சென்று எதிர்தாக்குதல் நடத்தி வைரஸ்களை அழிப்பதற்குள், வைரஸ்களின் தாக்குதல்களால் நம் உடலுக்கு பெரும் கேடு விளைந்து விடும். ஆகையால், எந்தெந்த வைரஸ்களால், பெரும் பாதிப்பு வருகிறதோ, அந்தந்த வைரஸ்களைப் பிடித்து, அதனை முற்றிலும் செயலிழக்கச் செய்து, அதனை உள்ளே செலுத்துவார்கள். உள்ளே செல்லும் வீரியமற்ற/செயல்படாத வைரஸ்களை, வீரயமற்றது என்று தெரியாமலேயே, டி-ஹெல்பர் செல்கள் ஸ்கேன் செய்து, அதன் பலம்/பலவீனம்/வடிவம், எப்படித் தாக்க வேண்டும் போன்றவற்றை படை வீரர்களான வெள்ளை அணுக்களுக்குத் தகவல் தந்து விடும். இப்படி கொடுக்கப்பட்ட தகவல்கள் எப்பொழுதும் மெமரியில் ஸ்டோர் ஆகியிருக்கும்.
இப்படி ஏற்கனவே தயார் படுத்தி விட்டால், பின்னாட்களில் நிஜமான வீரியத்துடன் வைரஸ்கள் உள்ளே நுழைந்த அடுத்த வினாடியே, டி-ஹெல்பர் செல் விசிலடிக்க, வெள்ளையணுக்கள் திரண்டு வந்து ஒரே அடியாக அடித்து வீழ்த்தி விடும். உடனே தாக்கி கொல்லா விட்டால். போலியோ போன்ற பாதிப்புகளைக் குழந்தைகள் சுமக்க வேண்டியிருக்கும்.
இதில் எம்.எம்.ஆர். என்ற தடுப்பூசி 2-3 ஆயிரங்கள் கொடுத்து நாம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக போட்டுக் கொள்கிறோம். இப்பொழுது மத்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடந்த சில பத்து வருடங்களில், போலியோ, காலரா போன்ற பாதிப்புகளிலிருந்து நம் குழந்தைகள் தப்பித்ததற்கு தடுப்பூசிகளின் பங்கு அளப்பரியது.
சந்தேகமென்றால், உங்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவர்களிடம் உடனே விசாரித்துக் கொள்ளுங்கள்.
சமூக வலைதளங்களில் உலாவரும் “தடுப்பூசி போடாதீர்கள்” என்ற வதந்தியை நம்பி உங்கள் குழந்தைகளின் உடல் மற்றும் உயிருக்கு உலை வைத்துக் கொள்ளாதீர்கள்.
உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் இந்த விளக்கத்தைக் கொடுத்து குழந்தைகளை கொடூரமான பாதிப்பிலிருந்து காப்பாற்றுங்கள்.

Comments
Post a Comment