Posts

Showing posts from April, 2017

உத்தவ கீதை - சில கேள்விகளும் பதில்களும்

Image
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள்புரிந்தவர், உத்தவர்.  இவர் தனது   வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.    துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணியை முடித்துவிட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரே, இந்த அவதாரத்தில்பலர் என்னிடம் பல  வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர். ஆனால், நீங்கள் எதுவுமே  கேட்டதில்லை. ஏதாவதுகேளுங்கள், தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே, எனது அவதாரப் பணியை முடிக்கநினைக்கிறேன் என்றார். இந்த உரையாடலில் உத்தவர் கேட்ட கேள்விகளும் அதற்கு யசோதை மைந்தனின் பதில்களும் உத்தவ கீதை எனப்படுகிறது. மகாபாரதத்தில் ஏற்படும் சில அடிப்படை சந்தேகங்களை இது தீர்த்து வைக்கிறது என்பது இதன் சிறப்பு. பெருமானே! நீ வாழச் சொன்ன வழிவேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில்... நீ ஏற்ற பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு. அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக இருக்கிறேன்நிறைவேற்றுவாயா?...

பாலியல் பலாத்காரம் - எதிர்கொள்வது எப்படி?

Image
யாரென்றே தெரியாத ஒருவன் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடும்போது பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். கத்துவது , உதைப்பது , கையில் கிடைப்பதை எடுத்து அடிப்பது இன்ன பிற ..... இதே  உறவுக்காரர் , ஆசிரியர் , நண்பர் , தெரிந்தவர் போன்றவர்கள் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுபோது , அவர்களின் மீதிருக்கும் பழைய மரியாதை காரணமாக எதிர்ப்பு தெரிவிக்க சற்று தாமதமாகி விடுகிறது . இவர்களா இப்படி ? என்ற அதிர்ச்சியும் குழப்பமும் கூட காரணமாக இருக்கலாம். பழைய மரியாதை , இப்போதைய கோபம் என கலந்து கட்டி , ஆக்ரோஷமான எதிர்ப்பை தெரிவிக்க இயலாமல் குழம்பி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த குழப்பத்தை சாதகமாக்கி வேலையை முடித்துக்கொள்கின்றனர் நன்கு "தெரிந்தவர்கள் " பாலியல் பலாத்காரம் என்று வரும்போது முன்பின் தெரியாதவனும் ஒன்றுதான் , கற்றுக்கொடுத்த ஆசிரியரும் ஒன்றுதான். பாசத்தை கொட்டிய சித்தப்பாவும் , மாமாவும் ஒன்றுதான் என்று சிறுமிகளுக்கு புரிய வைக்க வேண்டும். இந்த செயலில் ஈடுபடும்போதே பொறுக்கி ஆகி விடுகிறார்கள். அதனால் பொறுக்கிகளை எப்படி ஹேண்டில் செய்வோமோ அப்படியே இவர்களையும் ஹேண்டில் செய்ய வேண்...

கோவில் மூடியிருக்கும் போது கடவுளை வணங்கலாமா?

Image
➠ கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது. ➠ வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது. ➠ திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். ➠ அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. ➠ புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. ➠ எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது. ➠ மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். ➠ செவ்வாய் கிழமை, புதன்கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது. ➠ சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. ➠ வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது. ➠ இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்த...

'' வைக்கம் வீரர் '' உருவான '' கதை''

Image
காலம் காலமாக கழகங்கள் கொடுக்கும் பில்ட் அப்பை மட்டுமே பார்க்கும் எவருக்கும் வைக்கம்போராட்டம் என்பது என்னமோ ஈ.வெ.ராவால் ஆர‌ம்பிக்கப்பட்டு , நடத்தப்பட்டு , வெற்றிகரமாக ஆலய நுழைவு செய்யப்பட்ட‌து  என்றே நினைக்கத்தோன்றும்..... வைக்கம் என்னும் ஊர் கேரளாவில் , அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கிராமம்.... 1916 ல் திட்டமிடப்பட்டு 1924ல் துவங்கிய அந்த போராட்டத்தை துவங்கி , நடத்தியவர் டி.கே.மாதவன் என்பவர்.... அன்றைய காலகட்டத்தில் , தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழையமுடியாத நிலை நாடு முழுவதும் இருந்தது.... ஈ.வெ.ரா ஏன் தன் போராட்டத்தை தமிழகத்தில் நடத்தவில்லை? அவர் பிறந்த ஈரோட்டிலோ , சேலத்திலோ , கோவையிலோ ,எல்லா கோயிலகளிலும் தலித்கள் அனுமதிக்கப்பட்டனரா என்ன? இங்கு இருக்கும் கோயில்களை விட்டுவிட்டு எங்கோ இருக்கும் வைக்கத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன?  வைக்கத்தில்  இருந்த சோமநாதர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடக்கக் கூடாது என்கிற நடைமுறை பல ஆண்டு காலங்களாக இருந்து வந்தது. . இந்நிலையில் ஸ்ரீ நாராயணகுருவின் சீடரும், காங்கிரசு பேரியக்கத்தைச் சார்ந்தவருமான ட...

தடுப்பூசி ஏன்?

Image
குழந்தைகள் வைத்திருப்போர்களின் கவனத்திற்கு, தடுப்பூசி போடுவது ஏன்? தடுப்பூசி என்பது மருந்தல்ல என்ற எளிய உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். தடுப்பூசி என்று நமக்கு உட்செலுத்தப்படும் திரவம், எந்த வைரஸால் நமக்கு பாதிப்பு வரும் என்று பயப்படுகிறோமோ, அதே வைரஸ் தான். ஆனால், அதனை முற்றிலும் செயல் இழக்கச் செய்து நமக்கு உட்செலுத்தப்படும். பயப்படாதீங்க! தடுப்பூசி/சொட்டு மருந்து எப்படி செயல்படுகிறது என்று என் அறிவுக்கு எட்டியவரை மிக எளிமையாகச் சொல்ல முனைகிறேன். நம் உடலுக்குள் வீரியத்துடன் உள்ளே நுழையும் வைரஸ்களை அடையாளம் கண்டு, அதன் சக்தியை உணர்ந்து, நம் வெள்ளையணுக்கள் சென்று எதிர்தாக்குதல் நடத்தி வைரஸ்களை அழிப்பதற்குள், வைரஸ்களின் தாக்குதல்களால் நம் உடலுக்கு பெரும் கேடு விளைந்து விடும். ஆகையால், எந்தெந்த வைரஸ்களால், பெரும் பாதிப்பு வருகிறதோ, அந்தந்த வைரஸ்களைப் பிடித்து, அதனை முற்றிலும் செயலிழக்கச் செய்து, அதனை உள்ளே செலுத்துவார்கள். உள்ளே செல்லும் வீரியமற்ற/செயல்படாத வைரஸ்களை, வீரயமற்றது என்று தெரியாமலேயே, டி-ஹெல்பர் செல்கள் ஸ்கேன் செய்து, அதன் பலம்/பலவீனம்/வடிவம், எப்படித் தாக்க வேண்டும் ப...

மலேகன் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்குகிறார் ப.சிதம்பரம்

ஹிந்து பயங்கரவாதம், காவி தீவிரவாதம் SAFFRON TERROR HINDU EXTREMISM என்ற சொற்களை பயன்படுத்தினால் போதாது.  அதற்கு ஆதாரங்களும் நாம்தான் ஏற்பாடு செய்யவேண்டும் என்று தேசிய ஆலோசனை குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார்கள் போலும்.  அதற்கு வித்திடுவதுபோல இருக்கிறது இந்த செயல். இராணுவத்தில் இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு என்றபோது இராணுவத்தில் இருந்த முஸ்லிம்களே எதிர்த்தார்கள்.  ஆனால் ஹிந்துக்களின் பயங்கரவாதிகள் அதுவும் இராணுவத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் உருவாக்க முயன்றது உண்மையான பயங்கரவாதியான காங்கிரஸ் அரசு, அதுவும்சோனியாவின் தலைமையில். லெப்டினன்ட் கர்னல் புரோஹித் சிக்கினார்.  2008 மலேகான் குண்டு வெடிப்பில் இவர்தான் குற்றவாளி என்றும், சாத்வி பிரக்யா தாக்குருடன் இணைந்து இதை நிகழ்த்தினார் என்றும், இவர்தான் ரகசியமாக 60 கிலோ RDX வெடி மருந்தை திருடி இதை செய்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.  இப்போது டைம்ஸ் நவ் ஊடகத்துக்கு ஒரு ஆதாரம் சிக்கியுள்ளது.  அதன்படி, புரோஹித் அப்பாவி என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் கிடைத்துவிட்டன. தேசிய புலனாய்வு துறை மலேகான் குண்டு வெடி...